தலைவி படத்துக்கு தடைகோரிய வழக்கு: இயக்குநர்கள் பதிலளிக்க உத்தரவு

சென்னை, நவம்பர்-05

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க தடை கோரிய மனு தொடர்பான விசாரணையில் இயக்குனர்கள் விஜய், கவுதம் வாசுதேவ் மேனனிடம் விளக்கம் கேட்டு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை ‘தலைவி’ என்ற பெயரில் தமிழிலும், ‘ஜெயா’ என்ற பெயரில் இந்தியிலும் இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடிக்கிறார்.

இதே போல் கவுதம் வாசுதேவ் மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இணையதள தொடராக தயாரிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தன் அனுமதியில்லாமல் ‘தலைவி’ படத்தையும், இணையதள தொடரையும் எடுக்க தடை விதிக்க கோரி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவை விசாரித்த நீதிபதிகள், தீபா தொடர்ந்த வழக்கில் இயக்குநர்கள் விஜய் மற்றும் கவுதம் வாசுதேவ் மேனன் இருவருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். மேலும், இருவரையும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 14-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *