அசாமில் மின்சார பேருந்து அறிமுகம்!!!

திஸ்பூர், நவம்பர்-04

அசாமில் ‘மாசில்லா மின்சார பேருந்துகளை அம்மாநில முதல்வர் சோனோவால் தொடங்கி வைத்தார்.

டெல்லி மற்றும் தலைநகர் மண்டலத்தில் காற்றுமாசு மிக கடுமையாக அதிகரித்துள்ளது. தொடர் காற்று மாசு காரணமாக, மக்களுக்கு மூச்சுத்திணறல், இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் முகமூடி அணியாமல் வெளியே வரவேண்டாம் என்று அரசால் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அசாமில் மின்சார பேருந்துகளை முழுவதுமாக இயக்க முடிவு செய்துள்ள மாநில அரசு 15 பேருந்துகளை பயன்பாட்டிற்கு விட்டுள்ளது. முதலமைச்சர் சர்பானந்தா சோனோவால் கவுகாத்தி நகரில் 15 மின்சார பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார்.

பின்னர் பேசிய அவர் எங்களுடைய நோக்கம் மாசில்லா அசாம் மற்றும் இந்தியாவை உருவாக்குவது. அதனால் நாங்கள் கவுகாத்தி நகரில் 15 மின்சார பேருந்துகளை அறிமுகப்படுத்தி உள்ளோம். அசாம் முழுவதும் மின்சார பேருந்துகளை பரவலாக கொண்டு வருவோம் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *