ஆளுநருடன் முதலமைச்சர் சந்திப்பு!!!

சென்னை, நவம்பர்-04

சென்னை ராஜ்பவனில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்.

சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். ஆளுநர்-முதல்வர் இடையேயான சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்றது. தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை உள்ளிட்டவைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

குறிப்பாக, இந்த சந்திப்பில் அமைச்சர்கள் யாரும் பங்கேற்கவில்லை. தலைமை செயலாளர் சண்முகம், சட்டம் ஒழுங்கு டிஜிபி திரிபாதி உள்ளிட்டோர் முதல்வர்-ஆளுநர் இடையேயான சந்திப்பில் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *