குடிமகன்களுக்கு குட் நியூஸ்.. சரக்கு விற்பனையை நள்ளிரவு 1 மணி வரை நீட்டித்து புதுச்சேரி அரசு உத்தரவு

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மதுபானங்கள் விற்பனை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது சர்ச்சையாகி உள்ளது.

புதுச்சேரி, டிச-28

புதுச்சேரியில் கடற்கரை, ஓட்டல்களில் கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி புத்தாண்டை கொண்டாட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு ஊர்களில் இருந்து புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது புதுச்சேரி ஓட்டல்களில் நள்ளிரவு 1 மணி வரை மதுவிற்பனை செய்வதற்கு கலால் துறை சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது. பிற மதுக்கடைகளில் இரவு 11 மணி வரை மட்டுமே மது விற்பனை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. புதுச்சேரியில் தற்போது வரை 2 பேருக்கு ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், ஆளும் என்.ஆர்.காங். பாஜக கூட்டணி அரசு, மதுபானங்கள் விற்பனை நேரத்தை நீட்டித்து உத்தரவிட்டிருப்பது சர்ச்சையாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *