காற்று மாசு சீரியஸான விஷயம்: உடனடி நடவடிக்கை தேவை-பிரியங்கா காந்தி

புதுடெல்லி, நவம்பர்-04

டெல்லியில் ஏற்பட்டிருக்கு காற்று மாசுபாடு நாடு முழுவதும் பேசப்பட்டு வருகிறது. இதில் அரியானா, பஞ்சாப் மாநிலங்கள்தான் காரணம் என்று டெல்லி குற்றம் சாட்டியுள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் மத்திய மாநில அரசுகளை கண்டித்துள்ளனர். 

இந்த நிலையில், டெல்லி காற்று மாசுபாடு குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: டெல்லி, நொய்டா, காஜியாபாத், கான்பூர், பனாரஸ், லக்னோ உள்ளிட்ட நகரங்கள் காற்று மாசுபாட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. இது மிகவும் சீரியஸான விஷயமாகும். இதனால் நம்முடைய குழந்தைகள், வேலைக்கு செல்வோர், சாதாரண பொதுமக்கள் உள்ளிட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

காற்று மாசுபாட்டு பிரச்னையை நாம் ஒன்றுபட்டு எதிர்கொள்ள வேண்டும். 1952-ல் லண்டனில் ஏற்பட்ட மிக மோசமான காற்று மாசுபாட்டால் 12 ஆயிரம் பொதுமக்கள் உயிரிழந்தார்கள். லட்சக்கணக்கானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக லண்டன் மக்கள் வீதிக்கு வந்து போராடினர். இதன் விளைவாக புதிய சட்டம் இயற்றப்பட்டு மாசுபாடு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இவ்வாறு பிரியங்கா தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *