இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம்.. தலைவர்கள் வாழ்த்து

சென்னை, டிச-25

இயேசு கிறிஸ்து பிறந்த நாளான இன்று டிசம்பர் 25ம் தேதி உலகமெங்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இப்பண்டிகையையொட்டி தமிழக கவர்னர், முதல்வர் மற்றும் அரசியல் தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

தமிழக கவர்னர் ஆர். என்.ரவி தனது வாழ்த்துச் செய்தியில், ‛நாம் எல்லோரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை உணர்த்தும் வகையில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை நமக்கு போதிக்கும் நன்னாள் கிறிஸ்துமஸ் திருநாள்’ இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின், ‛சகிப்புத்தன்மை, அகிம்சை பகைவருக்கும் நன்மை செய்யுங்கள் என்ற உயர்ந்த அன்பையும் போதித்தவர் இயேசு பிரான் பிறந்த நாளை உலகில் உள்ள கிறிஸ்துவ பெருமக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர்.. அனைவரும் சமம் என்ற சமத்துவ கொள்கை இந்நாளில் மிளிர்வதை காண்கிறோம். கோவிட் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடித்து இப் பண்டிகையை கொண்டாடும் படி கேட்டுக் கொண்டுள்ளார்.

அதிமுக. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியில் ‛பகைவர்களிடத்திலும் அன்பு காட்டி வேற்றுமைகளை மறந்து ஒற்றுமைடன் வாழ உறுதியேற்போம் . இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்

பா.ஜ.க, மாநில தலைர் அண்ணாமலை வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியில், ‛கிறிஸ்துமஸ் நன்னாளில் ஒவ்வொருவர் வாழ்விலும் சந்தோஷம், சமாதானம், செழிப்பு, நல்வாழ்வு தழைத்தோங்கச் செய்திட வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.

மதிமுக நிறுவனர் வைகோ வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‛ மண்ணில் மனித நேயம் செழிக்கவும், சமய நல்லிணக்கம் ஓங்கவும், சமூக ஒற்றுமை காக்கவும் கிறிஸ்துமஸ் நாளில் சூளுரைப்போம், ‘ இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியில், மனிதாபிமான உணர்வோடும் சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வரும் கிறிஸ்துவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன், ‘ இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *