ஆழியாறு அணையில் நீர் திறந்து அமைச்சர் S.P.வேலுமணி மலர்தூவி வரவேற்பு…

கோவை, நவம்பர்-04

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அணையில் இருந்து பாசனத்தேவைக்காக இன்று தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

முன்னதாக பொள்ளாச்சி கால்வாய், வேட்டைகாரன்புதூர் கால்வாய், சேத்துமடை கால்வாய், ஆழியாறு ஊட்டுக்கால்வாய்களில் இருந்து முதல்போக பாசனத்தேவைக்காக தண்ணீர் திறந்துவிடும்படி அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதையடுத்து, இன்று முதல் இடைவெளி விட்டு 70 நாள்களுக்கு மொத்தம் 2 ஆயிரத்து 250 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீா் திறந்து விட முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், இன்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்து, அதனை மலர் தூவி வரவேற்றனர். அமைச்சரோடு துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உடனிருந்தார்.

One thought on “ஆழியாறு அணையில் நீர் திறந்து அமைச்சர் S.P.வேலுமணி மலர்தூவி வரவேற்பு…

 • February 18, 2020 at 3:09 am
  Permalink

  Awesome blog! Do yyou have any helpful hints for aspiring writers?
  I’m hoping to start my owwn blog soon but I’m a little lost
  on everything. Would you suggest starting with
  a free platform like WordPress or go for a paid option? There arre so many
  choices out there that I’m totally confused .. Any tips?

  Appreciate it!
  frontendevelop.com

  Reply

Leave a Reply to frontendevelop.com Cancel reply

Your email address will not be published. Required fields are marked *