தெலுங்கானாவில் இலவச ‘சரக்கு’ வழங்க அனுமதி: குடிமகன்கள் ஹேப்பி..!

ஐதராபாத், ஜூலை-9

EDINBURGH, SCOTLAND – MARCH 19: Bottles of whisky on display in the Diageo Claive Vidiz Collection, the world’s largest collection of Scottish Whisky on display at The Scotch Whisky Experience on March 19, 2014 in Edinburgh, Scotland. Chancellor of the Exchequer, George Osborne announced today in his final budget before the Scottish independence referendum, that duty on Scotch whisky is to be frozen. (Photo by Jeff J Mitchell/Getty Images)

கொரோனா தொற்றின் முதல் மற்றும் இரண்டாவது அலைகளால் பார்கள் மற்றும் உணவகங்கள் ரெஸ்டாரண்டுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், மதுபான வர்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையில், இலவச மதுபானங்களை வழங்கவும், பெரிய அளவிலான தள்ளுபடிகளை வழங்கவும் தெலுங்கானா அரசு அனுமதி வழங்கவுள்ளது. அதன்படி, மக்கள் மதுக்கடைக்குச் செல்வதை ஊக்குவிக்கும் வகையிலும் மதுபான விற்பனையை அதிகரிக்கும் வகையிலும், உரிமம் பெற்ற பார்களில் வழிமுறைகள் வகுக்கப்பட்டு இலவசமாக மது வழங்கப்படும். மதுப்பிரியர்களை ஈர்க்கும் பொருட்டு, பீர், விஸ்கி, ஜின், ரம் என்று எந்த வகை சரக்கை வேண்டுமானாலும் பார் நிர்வாகங்கள் இலவசமாக வழங்கிக் கொள்ளலாம்.

பார்களுக்கு வருகை புரியும் மதுப்பிரியர்களுக்கு இலவச சரக்கு வகைகள் மட்டுமல்லாமல் அதிக அளவிலான தள்ளுபடிகளும் வழங்கப்படவுள்ளன. ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம், இரண்டு பீர் வாங்கினால் சிக்கன் இலவசம் என்பன உள்ளிட்ட ஆஃபர்களும் வழங்கப்படவுள்ளன. நுகர்வோர் முதலில் மதுக்கடைகளுக்குச் செல்ல ஊக்குவிக்கும் வகையில் இலவச மதுபானத் திட்டத்தைத் தொடங்க அதிகாரிகள் நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தினர். நுகர்வோர் வருகை புரிய ஆரம்பித்ததும், மதுபான வியாபாரம் வளரும் மற்றும் மதுக்கடைகளில் இருந்து கிடைக்கும் வருவாய் மேம்படும் என்றும் இதன்மூலம், அரசாங்கமும் பார் நிர்வாகங்களும் நிதி சுமையில் இருந்து மீளலாம் என்றும் கூறப்படுகிறது.

இதற்காக டோக்கன் விநியோகிக்கப்பட்டு, அதன் பின்னர் குறிப்பிட்ட அளவுக்கு இலவசமாக மது வழங்கப்படும் என தெரிகிறது. இந்த புதிய திட்டம் விரைவில் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *