பட்ஜெட்டுக்கு முன்பாக நிதி நிலை பற்றிய வெள்ளை அறிக்கை.. அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உறுதி..!!

இன்னும் ஒரு சில நாட்களில் தமிழ்நாடு அரசின் நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை, ஜூலை-9

சென்னை தலைமை செயலகத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வரும் தொகை பற்றி மக்களுக்கு தெரிவிப்பது அரசின் கடமையாகும். முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.472 கோடி நிதி வந்துள்ளது. கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள், ஆக்சிஜன் மற்றும் படுக்கைக்கு ரூ.241 கோடி செயவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். மேலும் முதல்வர் பொது நிவாரண நிதி இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. கேரளா முதல்வரின் பொது நிவாரண நிதி இணைய தளம் சிறப்பாக இருந்ததால், அதை முன்மாதிரியாக கொண்டுள்ளோம். மே 6ம் தேதிக்கு முன் வந்த நிதியை தனி கணக்காக வைக்கவும், மே 7ம் தேதிக்கு பிறகு வந்த நிவாரணம் அனைத்தையும் கொரோனா என்ற தனிப்பிரிவில் வைக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார் என்று அமைச்சர் குறிப்பிட்டார். ஒரு சில நாட்களில் தமிழ்நாடு அரசின் நிதி நிலை பற்றிய வெள்ளை அறிக்கை, பட்ஜெட்டுக்கு முன்பாக வெளியிடப்படும் என்றும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உறுதி அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *