ஆளுநர் பதவியில் அமர தகுதியான ஒரு பெண் கூட இல்லையா? – குஷ்பு அதிரடி கேள்வி

சென்னை, ஜூலை-9

சமீபத்தில் கர்நாடகா, கோவா, அரியானா, மிசோரம், இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், திரிபுரா, ஜார்க்கண்ட் ஆகிய 8 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில், நடிகையும், பா.ஜ.க. பிரமுகருமான குஷ்பு நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், குடியரசுத் தலைவரிடம் ஒரு கேள்வியை மட்டும் கேட்க விரும்புகிறேன். எந்த ஒரு மாநிலத்திலும் ஆளுநர் பதவியில் அமரத் தகுதியான ஒரு பெண்ணைக்கூட நீங்கள் காணவில்லையா? ஏன் இந்த பாகுபாடு? இந்த செயல் வேதனை அளிக்கிறது. நான் உங்களை புண்படுத்தவில்லை என்று நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.

குஷ்புவின் இந்த கருத்து கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. பொதுவாக குஷ்பு எந்த பிரச்சினையிலும் தனது கருத்தை துணிந்து சொல்லக்கூடியவர். அந்த வகையில் இப்போதும் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *