மத்திய அமைச்சரவை விரிவாக்கம்.. எல்.முருகன் உள்பட 43 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!

டெல்லி, ஜூலை-7

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய மந்திரிசபை இன்று மாற்றம் செய்யப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர்கள், டாக்டர்கள், பொறியாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மந்திரி சபையில் இடம்பெற்றிருந்த ஹர்ஷ வர்தன், ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர், ரமேஷ் பொக்ரியால் உள்ளிட்ட முக்கிய மந்திரிகள் 12 ராஜினாமா செய்தனர்.

புதிதாக 43 பேர் இன்று மந்திரிகளாக பதவியேற்பார்கள் என அறிவிக்கப்பட்டு, அதற்கான பட்டியலும் வெளியிடப்பட்டது. தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், ஜோதிராதித்ய சிந்தியா, சர்பானந்த சோனோவால், ஹர்தீப் சிங் புரி, வீரேந்திர குமார், ஆர்.பி. சிங், கிஷன் ரெட்டி, மீனாட்சி லேகி, அஜய் பட், அனுராக் தாகூர், ராம்விலாஸ் பஸ்வானின் சகோதரர் பாசுபதி குமார் பராஸ் ஆகியோரின் பெயர்களும் புதிய மந்திரிகள் பட்டியலில் இடம்பெற்றிருந்தன.

மந்திரிசபையில் இடம்பெற்ற தலைவர்கள்

இந்நிலையில், புதிய மந்திரிகள் பதவியேற்பு விழா, ஜனாதிபதி மாளிகையில் இன்று மாலை நடைபெற்றது. விழாவில், புதிய மந்திரிகள் 43 பேருக்கும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். வரிசைப்படி ஒவ்வொருவராக பதவியேற்றனர்.

விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித் ஷா

பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித் ஷா மற்றும் முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.

மந்திரிசபையில் இடம்பெற்றுள்ள தலைவர்கள் பெயர் வருமாறு:

 1. நாராயண் ராணே
 2. சர்பானந்த சோனோவால்
 3. வீரேந்திர குமார்
 4. ஜோதிராதித்ய சிந்தியா
 5. ராமச்சந்திர பிரசாத் சிங்
 6. அஸ்வினி வைஷ்ணவ்
 7. பசுபதிகுமார் பராஸ்
 8. கிரண் ரிஜிஜூ
 9. ராஜ்குமார் சிங்
 10. ஹர்தீப் சிங் புரி
 11. மன்சுக் மண்டாவியா
 12. பூபேந்தர் யாதவ்
 13. பர்சோத்தம் ருபாலா
 14. கிஷன் ரெட்டி
 15. அனுராக் சிங் தாகூர்
 16. பங்கஜ் சவுத்ரி
 17. அனுப்பிரியா சிங் படேல்
 18. சத்யபால் சிங் பாகல்
 19. ராஜீவ் சந்திரசேகர்
 20. சுஷ்ரி ஷோபா கரண்டாலாஜே
 21. பானு பிரதாப் சிங் வர்மா
  22 தர்ஷன விக்ரம் ஜர்தோஷ்
 22. மீனாட்சி லேகி
  24.அன்னபூர்ணா தேவி
 23. ஏ.நாராயணசாமி
 24. கவுசல் கிஷோர்
 25. அஜய் பட்
 26. பி.எல் வர்மா
 27. அஜய்குமார்
 28. சவுகான் தேவுசிங்
 29. பகவந்த் குபா
 30. கபில் மோரேஸ்வர் பட்டீல்
 31. சுஷ்ரி பிரதிமா பவுமிக்
 32. சுபாஸ் சர்கார்
 33. பகவத் கிருஷ்ணராவ் காரத்
 34. ராஜ்குமார் ரஞ்சன் சிங்
 35. பாரதி பிரவீன் பவார்
 36. பிஸ்வேஷ்வர் துடு
 37. சாந்தனு தாகூர்
 38. முஞ்சப்பாரா மகேந்திரபாய்
 39. ஜான் பார்லா
 40. எல்.முருகன்
 41. நிஷித் பிரமானிக்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *