பட்டப்பகலில் பெண் தாசில்தார் உயிரோடு எரித்துக்கொலை

ஐதராபாத், நவம்பர்-04

தெலுங்கானாவில் பட்டப்பகலில் பெண் தாசில்தார் ஒருவர் அலுவலகத்திலேயே உயிரோடு எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கானா மாநிலம் ரெங்காரெட்டி மாவட்டம் அப்துல்லாபுரமேட் தாசில்தாராக பணியாற்றி வந்தவர் எம்மாராவ் விஜயா ரெட்டி. திடீரென பட்டப்பகலில் அவரின் அலுவலக அறைக்குள் நுழைந்த ஒரு கும்பல் அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதலில் அந்த கும்பல் அலுவலகத்தில் வைத்து பேசிக் கொண்டிருந்த போதே தாசில்தார் விஜயா ரெட்டி மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துள்ளனர். தீ பற்றிய நிலையில் தாசில்தார் விஜயா ரெட்டி துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாசில்தாரை காப்பாற்ற முயன்ற 2 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாசில்தாரை எரித்துக் கொலை செய்த சுரேஷ் என்கிற நபரை கைது செய்து போலீசார் விசாரணை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்த முழு விவரங்களையும் வழங்குமாறு முதலமைச்சர் அலுவலகம், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு வருவாய் மற்றும் தாசில்தார் ஊழியர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மாஜிஸ்திரேட் பதவியில் இருக்கும் தாசில்தாரை அலுவலகத்திற்குள் எரிப்பது குறித்து அரசு ஊழியர்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *