திருவள்ளுவர் சிலை அவமதிப்பு: தனிப்படை அமைப்பு

தஞ்சாவூர், நவம்பர்-04

தஞ்சை அருகே திருவள்ளுவர் சிலையை அவமதிப்பு செய்தவர்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைத்து டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்

தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் அருகே திருவள்ளுவர் சிலை மீது மர்ம நபர்கள் சாணத்தை வீசியும், கறுப்பு துணியை கட்டியும் மர்ம நபர்கள் சிலர் அவமதித்துள்ளனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அரசியல் தலைவர்கள் பலர் சிலை அவமதிப்பு செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக தஞ்சை மாவட்ட போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இருப்பினும் திருவள்ளுவர் சிலையை அவமதித்த விவகாரம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு குற்றசாட்டுகள் எழுந்தன.

இந்த நிலையில், சிலையை அவமதிப்பு செய்த மர்மநபர்களை கண்டுபிடிக்க ஒரு தனிப்படையை அமைத்து டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் பேரில் டிஎஸ்பி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு சிலை அவமதிப்பு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  மேலும், சம்பவம் நிகழ்ந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சி பதிவுகளை கொண்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என டிஜிபி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *