எம்ஜிஆருக்கே ஆலோசனை கூறினேன்.. சசிகலா பரபரப்பு பேச்சு

எம்ஜிஆர் கட்சி சம்பந்தமாக நிறைய விஷயங்கள் கேட்பார். நான், அவருக்கு ஆலோசனை கூறியுள்ளேன் என்று தூத்துக்குடி அதிமுக பிரமுகரிடம் சசிகலா கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை, ஜூலை-2

சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியடைந்ததை தொடர்ந்து அதிமுக நிர்வாகிகளிடம் செல்போனில் தொடர்பு கொண்டு சசிகலா பேசி வருகிறார். இதேபோல் தூத்துக்குடியை சேர்ந்த அதிமுக மூத்த நிர்வாகி ராமசாமியிடம் சசிகலா பேசிய ஆடியோ விவரம்:-

சசிகலா: தலைவர் எம்ஜிஆர் மீது எனக்கு ரொம்ப பிரியம். அதனால் அப்போது முதலே கட்சியில் பணி செய்து கொண்டிருந்தேன்.ஜெயலலிதாவை சமாதானப்படுத்தி அவரை மீண்டும் அரசியலுக்கு அழைத்து வந்தேன். அந்த சமயத்தில் நான் எனது தாயாரை பார்க்க மன்னார்குடி சென்றிருந்தேன். தகவல் கேட்டு சென்னை திரும்பினேன்.

ராமசாமி: இக்கட்டான சூழலிலும் உங்களிடம் உஷ்ணமாக வார்த்தைகள் வருவதில்லை. அதுவே தலைமை ஏற்க தகுதியானவை.

சசிகலா: தலைவர் அப்படித்தான் இருக்கணும்பாரு. சிறுவயதில் எம்ஜிஆரோடு சேர்ந்து பயணித்துள்ளேன். கட்சி விஷயமாக என்னிடம் நிறைய விஷயங்கள் கேட்பார். நானும் ஆலோசனைகளை சொல்லி உள்ளேன். இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்பேன். பொறுமையாக கேட்பார். அப்படித்தான் அவரிடம் இருந்து பழகி கொண்டேன். ஜெயலலிதாவும் கோபமாக முடிவெடுத்தால் கூட தொண்டர்களுக்காக நீங்கள் பொறுமை காக்க வேண்டும். மேல்மட்டத்தில் இருப்பவர்கள் அப்படித்தான் இருப்பார்கள். அதை கண்டுகொள்ளக் கூடாது என்று கூறி கொண்டு சென்றோம். அது சக்சஸ்புல்லாக இருந்தது. ஒரு முறை ஜானகி அம்மாள் கூப்பிட்டபோது ஜெயலலிதா கடும் கோபம் கொண்டார். அவரிடம் பேசி சமாதானம் செய்து சந்திக்க வைத்தேன். வரும் 5ம் தேதி வரை லாக்டவுன் சொல்லி உள்ளனர். அது முடிந்து விட்டால் புறப்பட்டு வருவேன். கண்டிப்பாக அனைவரையும் சந்திப்பேன். நடுக்கடலில் தத்தளித்து வரும் கப்பல் மூழ்கி விடுவோமோ என பயப்படுகின்றனர். வருத்தப்பட வேண்டாம். தொண்டர்களை காக்க நிச்சயம் தீவிர அரசியலுக்கு வருவேன்.

இவ்வாறு உரையாடியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *