சசிகலா சுற்றுப்பயணம் சென்றால் அதிமுகவினர் யாரும் செல்ல மாட்டார்கள்.. கடம்பூர் ராஜூ அதிரடி

சசிகலா சுற்றுப்பயணத்தின்போது அதிமுகவினர் யாரும் செல்லப் போவதில்லை. ஆகையால், அதை பற்றி எங்களுக்கு கவலையில்லை என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

சென்னை, ஜூன்-30

தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கடம்பூர் ராஜூ கூறியதாவது;-

அதிமுகவில் இருந்து ஒதுங்கி இருப்பவர்களிடமே சசிகலா பேசி வருகிறார். விளாத்திளத்தில் சசிகலாவுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் யாரும் பங்கேற்கவில்லை.அதிமுகவில் சசிகலாவை ஏற்க மாட்டோம் என்று தீர்மானம் நிறைவேற்றிய பின்னரும் அவர் அதிமுகவுக்கு வர முயற்சிப்பதற்கு என்ன நிர்ப்பந்தம் என்று தெரியவில்லை.

சசிகலா ஒரு கட்சியை தொடங்கிய பின்னர் சுற்றுப்பயணம் செய்தால் அதை யாரும் தடுக்க முடியாது. மாறாக அவர் அதிமுக என்ற போர்வையில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் வரக்கூடாது என்பதுதான் எங்களது கருத்து. சசிகலா ‌அமமுகவிற்கு தலைமையேற்று வழி நடத்தலாம். அதில் எங்களுக்கு ஆட்சேபனையும் இல்லை. ஆனால்.. அதற்கு டிடிவி தினகரன் ஒத்துக்கொள்ளவேண்டும். அமமுக கட்சியின் பொதுச் செயலாளராக தினகரன் இருக்கிறார். அவர் ஒப்புதல் இருந்தால் தான் அங்கும் செயல்பட முடியும். அதேபோல், அதிமுகவில் சேர்ப்பதற்கு ஒருங்கிணைப்பாளர். இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் வேண்டும்.

திமுக எங்களுக்கு எதிர் கட்சி, சசிகலா பற்றி நாங்களும் கணக்கில் கூட எடுத்துக் கொள்ளவில்லை. சசிகலா சுற்றுப்பயணத்தின்போது அதிமுகவினர் யாரும் செல்லப் போவதில்லை. ஆகையால், அதை பற்றி எங்களுக்கு கவலையில்லை. அதிமுக வெற்றி பெற வேண்டும் என்று சசிகலா நினைத்திருந்தால் அமமுக போட்டியிடுவதை தடுத்திருக்கலாம் . அமமுக போட்டியிட்ட இடங்களில் உள்ள கோவிலுக்கு சசிகலா வர வேண்டிய அவசியம் என்ன? என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். சசிகலா அதிமுகவில் வேண்டாம் என்ற முடிவிற்கு தலைமை கழகம் வந்துள்ளது‌

இவ்வாறு கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *