ரூ.100-ஐ தாண்டிய பெட்ரோல் விலை.. வரிக்கொள்ளையே காரணம் என ப.சிதம்பரம் காட்டம்

சென்னை, ஜூன்-26

தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாயை தாண்டியுள்ள நிலையில், இந்த விலை உயர்வு குறித்து முன்னாள் மத்திய நிதி அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம், தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

அவரது பதிவில், ”உலக கிரிக்கெட் இறுதிப் போட்டியில் யாரும் சதம் அடிக்கவில்லை என்ற குறையைப் பெட்ரோல் விலை நீக்கிவிட்டது. தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாயைத் தாண்டியது. கச்சா எண்ணை விலை பீப்பாய்க்கு டாலர் 75 என்று இருக்கும் போது ஏன் இந்த நிலை?

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு காலத்தில் கச்சா எண்ணை விலை 105 டாலரைத் தாண்டியது, ஆனாலும் பெட்ரோல் விலை 65 ரூபாயை தாண்டவில்லை. இன்றைய நிலைக்கு ஒரே காரணம் மத்திய அரசின் வரிக் கொள்கை அல்ல, வரிக் கொள்ளை. இந்த வரிக் கொள்ளையின் மூலமாக மத்திய அரசு பல லட்சம் கோடி ரூபாய்களை நடுத்தர, ஏழை மக்களிடமிருந்து நாள் தோறும் உறிஞ்சுகிறது திரு மோடி அரசின் கொடூரத் தன்மையை மக்கள் நாள் தோறும் அனுபவிக்கிறார்கள்” என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *