உள்ளாட்சித் தேர்தலிலும் வெற்றி பெற பாடுபட வேண்டும் – மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

சட்டப்பேரவை தேர்தலை போல உள்ளாட்சித் தேர்தலிலும் வெற்றி பெற அனைவரும் பாடுபட வேண்டும் என முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை, ஜூன்-26

சென்னை அண்ணா அறிவாலாயத்தில், திமுக மாவட்டச் செயலாளர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது, விடுபட்ட 9 மாவட்டங்களில் நடக்க இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தென்காசி, நெல்லை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் செப்டம்பர் மாதத்திற்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்த வாய்ப்பு இருக்கிறது என்றும் அதற்கு மாவட்டச் செயலாளர்கள் தயார் நிலையில் இருக்குமாறும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டதாகத் தெரிகிறது.மேலும், 38 மாவட்டங்களில் நடைபெற இருக்கும் நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி சபைகளுக்கான தேர்தலில் கட்சி நிர்வாகிகளை தயார்படுத்தவும் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியதாகத் தெரிகிறது.

கூட்டத்தை தொடங்கி வைத்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், “எதிர்க்கட்சியாக இருக்கும்போது நாம் விமர்சனங்களை வைக்கும் இடத்தில் இருந்தோம். ஆளுங்கட்சியாக இப்போது விமர்சனங்களை எதிர்கொள்ளும் இடத்தில் இருக்கிறோம். இதைப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும். 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தல்களில் முழுமையான வெற்றியை அறுவடை செய்ய மாவட்டச் செயலாளர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்” என்று கூறியதாக
தெரிகிறது.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நடைபெறும் முதல் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *