8 வழிச்சாலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீதான வழக்கு திரும்பப்பெறப்படும்.: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை, ஜூன்-24

16-வது சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் கடந்த ஜூன் 21-ம் தேதி கலைவாணர் அரங்கில் தொடங்கியது. ஆளுநர் உரையுடன் தொடங்கிய 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளிக்கிறார்.

திமுக தலைமையிலான ஆட்சி அமைந்து, தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றை பேரவைக் கூட்டத்தில் பல முக்கிய அறிவிப்புகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.

அதில், தமிழகத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்ட சமத்துவபுரங்கள் சீரமைக்கப்படும். புதிய சமத்துவபுரங்கள் அமைக்கப்படும்.தமிழக்ததில் உள்ள பழமையான திருக்கோயில்களை புனரமைக்க ரூ.100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளுக்கான சிறப்பு மையங்கள் அமைக்கப்படும். சேலம் – சென்னை எட்டுவழிச்சாலை திட்டத்தை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும். தமிழகத்தின் மீத்தேன், நீயூட்ரினோ திட்டங்களுக்கு எதிராகப் போராடியவர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்படும். பத்திரிகையாளர்கள் மீது அதிமுக ஆட்சியில் போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்று ஸ்டாலின் அறிவித்தார்.

திமுக ஆட்சிக்கு வந்திருப்பதை பெருமையாக கருதுகிறேன் என ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மான விவாதத்தின் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் நீதிக்கட்சி வரலாற்று தொடர்ச்சியில் திமுக ஆட்சி அமைத்து இருப்பதை பெருமையாக கருதுகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *