மராட்டியத்தில் விரைவில் புதிய அரசு அமையும்- தேவேந்திர பட்னாவிஸ்

புதுடெல்லி, நவம்பர்-04

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் சிவசேனா, பாஜக இடையே இழுபறி நீடித்து வரும் நிலையில், முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், பாஜக தேசியத் தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷாவை சந்தித்துப் பேசினார்.

மகாராஷ்டிராவில் 288 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வென்றன. பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவை என்ற நிலையில் தனித்தனியாக இரு கட்சிகளுக்கு பெரும்பான்மை இல்லை.

ஆனால் தேர்தலுக்கு முன் செய்த உடன்பாட்டின்படி ஆட்சியில் இரண்டரை ஆண்டு காலத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சிவசேனா பாஜகவிடம் கோருகிறது. ஆனால், எந்தவிதமான ஒப்பந்தமும் செய்யப்படவில்லை. இதனால் இரு கட்சிகளுக்கும் இடையே மாநிலத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பாக கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இழுபறி நீடித்து வருகிறது. இந்தச் சூழலில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் டெல்லியில் உள்துறை அமைச்சரும், பாஜக தேசியத் தலைவருமான அமித் ஷாவைச் சந்தித்தார்.

இந்தச் சந்திப்புக்குப் பின், முதல்வர் பட்னாவிஸ் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ஆட்சி அமைப்பது தொடர்பாக மற்றவர்கள் பேசும் கருத்துக்கு நான் பதில் அளிக்கத் தயாராக இல்லை. ஆனால், விரைவில் பாஜக தலைமையில் புதிய அரசு பதவி ஏற்கும் எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *