புதுச்சேரியில் வாக்குப்பதிவு நிறைவு.. 78.03% வாக்குப்பதிவு
புதுச்சேரி மாநிலத்தில் இன்று 30 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. ஏனாமில் 90.79 சதவீத வாக்குகள் பதிவாகின.
புதுச்சேரி, ஏப்ரல்-6

புதுச்சேரியில் 30 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதில் 78.03 சதவீத வாக்குகள் பதிவாகின. அதிகபட்சமாக ஏனாம் தொகுதியில் 90.79 சதவீத வாக்குகள் பதிவாகின.
மற்ற தொகுதிகளில் பதிவான வாக்கு சதவீதம்
- மண்ணாடிப்பட்டு- 87.78
- திருபுவனை- 86.55
- ஊசுடு- 88.46
- மங்கலம்- 86.37
- வில்லியனூர்- 81.36
- உழவர்கரை- 75.42
- கதிர்காமம்- 76.00
- இந்திராநகர்- 79.58
- தட்டாஞ்சாவடி- 75.08
- காமராஜ் நகர்- 76.78
- லாஸ்பேட்டை- 78.99
- காலாப்பட்டு- 83.90
- முத்தியால்பேட்டை- 77.22
- ராஜ்பவன்- 73.24
- உப்பளம்- 83.71
- உருளையன்பேட்டை- 80.54
- நெல்லித்தோப்பு- 81.30
- முதலியார்பேட்டை- 81.09
- அரியாங்குப்பம் – 82.41
- மணவெளி- 84.38
- ஏம்பலம்- 87.30
- நெட்டப்பாக்கம்- 85.77
- பாகூர்- 87.90
- நெடுங்காடு- 82.94
- திருநள்ளாறு- 83.90
- காரைக்கால் வடக்கு- 77.44
- காரைக்கால் தெற்கு- 75.04
- நிரவி- 81.50
- மாகி- 73.53