தேர்தலுக்கு பிறகு ஊரடங்கு என பரவும் வதந்தியை மக்கள் நம்ப வேண்டாம்… சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்

சென்னை, ஏப்ரல்-5

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழகத்தில் அச்சம் தரும் வகையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரிக்கிறது. வாக்காளர்கள் நாளை மாஸ்க் அணிந்துதான் வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு செல்ல வேண்டும். வாக்குப்பதிவின்போது கடைசி ஒரு மணி நேரத்தில், கொரோனா பாதித்தவர்கள் வாக்களிக்கலாம். தேர்தலுக்கு பிறகு ஊரடங்கு என பரவும் வதந்தியை மக்கள் நம்ப வேண்டாம். 54 லட்சம் கொரோனா தடுப்பூசி நம்மிடம் இருந்தாலும் தினமும் 15 ஆயிரம் பேர்தான் தடுப்பூசி போடுகின்றனர். கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. ஏப்.7ந்தேதிக்கு பிறகு கொரோனா பரவாமல் தடுக்க வீடு வீடாக காய்ச்சல் குறித்து நேரில் ஆய்வு செய்யப்படும். காய்ச்சல் வந்தால் தள்ளிப்போடாமல் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்ய வேண்டும். மகாராஷ்டிராவில் உள்ள கொரோனா பாதிப்பு போல் தமிழகத்திலும் ஏற்படாமல் இருக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும். ஏப்.7ந்தேதிக்கு பிறகு தடுப்பூசி போடுவது தொடர்பான விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *