கொரோனா 2வது அலை.. வரும் 8ந்தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஏப்ரல் 8ம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.

டெல்லி, ஏப்ரல்-5

இந்தியாவில் கொரோனா வைரசின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. கடந்த சில தினங்களாக புதிய பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக மகாராஷ்டிரா, தமிழ்நாடு, பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவல் வேகம் எடுத்துள்ளது.

இந்நிலையில், ஏப்ரல் மாதம் 8ம் தேதி மாலை 6 மணியளவில் அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த முதல்வர்கள், ஆளுநர்களுடன் அவசர ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இதனிடையே, நாளை மாலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஷர்வர்தன் தமிழ்நாடு, மகாராஷ்டிரா உள்ளிட்ட 11 மாநிலங்களை சேர்ந்த சுகாதாரத்துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளார். அப்போது, ஒவ்வொரு மாநிலத்திலும், கொரோனா பரவல், தடுப்பூசி போடும் பணியை விரிப்படுத்துவது தொடர்பாக உத்தரவிட வாய்ப்புள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *