கொளத்தூர், சேப்பாக்கம் உள்ளிட்ட 5 தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்க.. அதிமுக மனு

தமிழகத்தில் கொளத்தூர் உள்ளிட்ட 5 தொகுதிகளில் நாளை நடைபெறவிருக்கும் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று அதிமுக வலியுறுத்தியுள்ளது.

சென்னை, ஏப்ரல்-5

தமிழக சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக நாளை ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.இந்நிலையில், தமிழகத்தில் கொளத்தூர், திருச்சி மேற்கு, காட்பாடி, சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி, திருவண்ணாமலை ஆகிய ஐந்து தொகுதிகளிலும் தேர்தலை ரத்து செய்யக் கோரி தேர்தல் ஆணையத்திடம் அதிமுக புகார் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியை சந்தித்து தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று மனு அளித்தார். கொளத்தூர், திருச்சி மேற்கு, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, திருவண்ணாமலை, காட்பாடி ஆகிய 5 தொகுதிகளில் திமுகவினர் பணப் பட்டுவாடா செய்வதாகவும், எனவே, இந்த குறிப்பிட்ட தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்திடம் அமைச்சர் ஜெயக்குமார் புகார் அளித்துள்ளார். இந்த 5 தொகுதிகளிலும் திமுகவினர் ‘கூகுள் பே’ மூலம் நவீன முறையில் பணப் பட்டுவாடா செய்வதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *