அடுத்த 4 நாள்களுக்கு அனல்காற்று வீசும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை !

சென்னை, ஏப்ரல்-3

இது தொடர்பாக இன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டதாவது:-

ஏப்ரல்7ம் தேதி வரை வரை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 4ல் இருந்து 6 டிகிரி செல்ஸியஸ் வரை உயரக்கூடும். மேலும் வருகிற ஏப்ரல் 6ம் தேதி அன்று கரூர், தருமபுரி, சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 4ல் இருந்து 5 டிகிரி செல்ஸியஸ் வரை உயரக்கூடும்.

சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, சிவகங்கை, புதுக்கோட்டை, வேலூர், ராணிப்பேட்டை, சேலம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், திருவள்ளுரிலும் வெயில் அதிகரிக்கும் என்று வெப்பநிலை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மதுரை, விருதுநகரில் 6 டிகிரி செல்சியஸ் அளவு வெப்பம் உயரும்.

இந்த நிலையில், வெப்பச்சலனத்தால் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் இடியுடன் மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் வடக்கு அந்தமான் பகுதிகளில் பலத்த சூறாவளி வீசக்கூடும். மன்னார் வளைகுடா பகுதியிலும் இன்று 60 கி.மீ.வேகத்தில் சூறாவளி வீசக்கூடும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *