தேர்தலை முன்னிட்டு 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்

சென்னை, ஏப்ரல்-3

தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் நாளை (ஞாயிறு) இரவு 7 மணியுடன் ஓய்கிறது. வாக்குப்பதிவு வருகிற 6-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி, நாளை (ஞாயிறு) முதல் 6-ந்தேதி வரை 3 நாட்கள் மதுபான கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதால் குடோன்களில் இருந்து கடைகளுக்கு கொண்டு செல்ல வேண்டிய மதுபானங்கள் கடந்த சில தினங்களாக கொண்டு செல்லப்படவில்லை. அதிக அளவில் மதுபானங்களை வாங்கி பதுக்குவதை தடுப்பதற்காக 30 சதவீதத்துக்கு மேல் விற்பனையாகும் கடைகளை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

மூன்று நாட்கள் தொடர்ந்து குடிக்க முடியாது என்பதால் மதுபிரியர்கள் முன்னேற்பாடாக மதுபாட்டில்களை வாங்கி ஸ்டாக் வைப்பதில் தீவிரமாக ஆர்வம் காட்டினார்கள். இதனால் மதுக்கடைகளில் இன்று கூட்டம் அலைமோதியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *