திமுக எம்.பி. கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி

திமுக எம்.பியும், அக்கட்சியின் மகளிரணி செயலாளருமான கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

சென்னை, ஏப்ரல்-3

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலையொட்டி கனிமொழி எம்.பி திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வந்தார். மேலும் தென் மண்டல தொகுதி பொறுப்பாளராகவும் பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில், திமுக அதிக தொகுதிகளில் வெற்றிபெறவேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டு வந்தார். இரண்டு தினங்களுக்கு முன்பு தேனி பரப்புரையில் ஈடுபட்டபோது அவருக்கு லேசான காய்ச்சல் இருந்தது. அதனைத் தொடர்ந்து சிகிச்சைபெற்று வந்தார்.

பரப்புரையை பாதியில் விட்டுவிட்டு சென்னை திரும்பிய அவருக்கு இன்று காலை தொண்டை கரகரப்பு மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நுங்கம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படவுள்ளார். கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவருடன் தேர்தல் பிரசாரத்தில் உடன் சென்ற கட்சி நிர்வாகிகளும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *