செந்தில் பாலாஜியை தூக்கிப் போட்டு மிதித்தால் பல் எல்லாம் வந்துவிடும்.. அண்ணாமலை பேச்சால் சர்ச்சை
‘செந்தில் பாலாஜியை தூக்கிப் போட்டு மிதித்தால் பல் எல்லாம் வெளியே வந்துவிடும். எனக்கு இன்னொரு முகம் இருக்கிறது. அது கர்நாடக முகம்” என்று பாஜக வேட்பாளர் அண்ணாமலை பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அரவக்குறிச்சி, ஏப்ரல்-2

கரூர் மாவட்டத்தில், அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக வேட்பாளராகக் களம் காணும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். பிரச்சாரத்தில் அண்ணாமலை பேசும்போது, “திமுகவின் செந்தில் பாலாஜியை தூக்கிப் போட்டு மிதித்தால் பல் எல்லாம் வெளியே வந்துவிடும். நான் இங்குள்ள திமுகவினருக்கு ஒரு எச்சரிக்கை விடுக்கிறேன். நான் வன்மத்தைக் கையில் எடுக்கத் தயாராக இல்லை. அகிம்சைவாதியாக அரசியல் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறேன். எனக்கு இன்னொரு முகம் இருக்கிறது. அது கர்நாடக முகம். அதைக் காட்ட வேண்டாம் என்று நினைக்கிறேன்” என்றார்.
அண்ணாமலையின் இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.