முகக்கவசம் அணியாவிட்டால் மதுபானம் கிடையாது- சத்தீஸ்கர் அரசு
சமூக இடைவெளியைப் பின்பற்றாமல், முகக்கவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளர்களுக்கு மதுபானம் விற்பனை செய்யப்படாது என்று சத்தீஸ்கர் மாநில அரசு அறிவித்துள்ளது.
ராய்ப்பூர், ஏப்.1

நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 4500 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 29 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த நிலையில் சத்தீஸ்கர் அரசு அனைத்து மதுபானக் கடைகளுக்கும் அனுப்பியிருக்கும் சுற்றறிக்கையில், கொரோனா தடுப்பு விதிமுறைகளை கட்டாயமாக பின்பற்றுமாறு தெரிவித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் கிருமிநாசினி வாங்குவது, முகக்கவசம் அணியாமல் வரும் நபர்களுக்கு முகக்கவசம் வழங்குவது, வளாகத்தை தூய்மைப்படுத்துவது உள்ளிட்டப் பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு மதுபானக் கடைக்கும் தலா ரு.10 ஆயிரம் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
மாவட்ட கண்காணிப்புக் குழுவினர், நாள்தோறும் ஐந்து முறை மதுபானக் கடைகளுக்குச் சென்று ஆய்வு நடத்தவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.