திருவள்ளுவர் சிலை அவமதிப்பு-மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

தஞ்சாவூர், நவம்பர்-04

தஞ்சை அருகே திருவள்ளுவர் சிலை மீது சாணம் வீசியும் கறுப்பு காகிதத்தால் கண்களை மறைத்தும் அவமதிக்கப்பட்டது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். 

தஞ்சையை அடுத்த பிள்ளையார்பட்டியில் தெய்வப்புலவர் என்று போற்றப்படும் திருவள்ளுவர் சிலையின் மீது மர்ம நபர்கள் சிலர் சாணத்தை வீசியும், கறுப்பு காகிதத்தால் கண்களை மறைத்தும் அவமதிப்பு செய்துள்ளனர். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்த வல்லம் போலீசார் விரைந்து வந்து திருவள்ளூர் சிலையை கழுவி சுத்தம் செய்து மாலை அணிவித்தனர்.

மேலும் அங்கு திரண்டிந்த மக்கள் சிலை அவமதிப்பை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். மர்ம நபர்களை கைது செய்வதாக போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து மறியலை கைவிட்டனர். இதற்கிடையே திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டதை அறிந்த தமிழ் ஆர்வலர்கள் அங்கு திரண்டு வந்து கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *