தமிழகத்தில் ஏப்.30 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு

ஏப்.30 வரை தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, ஏப்ரல்-1

மார்ச் மாதத் தொடக்கம் முதலே தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக உயர்ந்து வருகிறது. சென்னை, கோவை, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த ஏப். 30 வரை தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக, தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில், கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த ஏப்.30 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூழலுக்கு ஏற்ப கொரோனா கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகங்கள் விதித்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதித்த விமானப் பயணங்கள் தவிர மற்ற அனைத்து சர்வதேச விமானப் பயணங்களுக்கும் தடை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா பரிசோதனை – கண்காணிப்பு – சிகிச்சை தொடர வேண்டும் எனவும், நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஏற்கெனவே வகுத்து அளிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *