மாஸ்டர் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு கொரோனா
மாஸ்டர் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை, மார்ச்-29

மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவர் அடுத்தபடியாக கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் திரைப்படத்தை இயக்குகிறார்.
இந்த நிலையில் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளதாவது:
“எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். அங்கு என்னை நன்றாகப் பார்த்துக் கொள்கிறார்கள். விரைவில் வலிமையாக மீண்டு வருவேன்.”