முதல்வரிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட ஆ.ராசா..!

முதல்வர் பழனிசாமி குறித்த விமரிசனத்துக்காக மனம் திறந்து மன்னிப்புக் கோருகிறேன் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா கூறியுள்ளார்.

நீலகிரி, மார்ச்-29

நீலகிரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,“ எனது பேச்சால் முதல்வர் காயப்பட்டு கலங்கினார் என்ற செய்தியை செய்திதாள்கள் வழியாக கேட்டு மிகுந்த மனவேதனை அடைகிறேன். இடப்பொருத்தமற்று சித்தரிக்கப்பட்டு தவறாக புரிந்துகொள்ளப்பட்ட எனது பேச்சிற்காக எனது அடிமனதின் ஆழத்திலிருந்து வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்னும் ஒரு படி மேலே போய் சொல்ல வேண்டுமென்றால், முதல்வர் பழனிசாமி அரசியலுக்கு அல்லாமல், உள்ள படியே காயப்பட்டிருப்பதாக உணர்வாரேயானால் என மனம் திறந்த மன்னிப்பை கோருவதில் எனக்கு சிறிதும் தயக்கமில்லை. எனது பேச்சு இரண்டு தலைவர்களை பற்றிய தனிமனித விமர்சனம் அல்ல. பொதுவாழ்வில் இரண்டு அரசியல் ஆளுமைகள் குறித்த மதிப்பீடும் ஒப்பீடும்தான்.” என்றார்.

தனது தாயார் குறித்து ஆ.ராசா விமர்சித்தார் என்று நேற்று தேர்தல் பிரசாரத்தில் பேசிய போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண்கலங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *