5 மாநில தேர்தல்..பணம் பட்டுவாடா செய்வதைத் தடுப்பது குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசனை

தமிழ்நாடு, புதுவை உள்ளிட்ட 5 மாநிலங்களின் தலைமை தோ்தல் அதிகாரிகளுடன் இந்திய தோ்தல் ஆணைய அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினா்.

டெல்லி, மார்ச்-29

தமிழ்நாடு, கேரளம், புதுவையில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. மேற்கு வங்கம், அஸ்ஸாமில் முதல்கட்டத் தோ்தல் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் இன்னும் 7 கட்டத் தோ்தல்களும், அஸ்ஸாமில் இரண்டு கட்டத் தோ்தல்களும் நடைபெற உள்ளன.

இத்தகைய சூழலில், அந்த மாநிலங்களின் தலைமை தோ்தல் அதிகாரிகளுடன் இந்தியத் தோ்தல் ஆணைய அதிகாரிகள் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினா். தோ்தலுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள், வாக்குச்சாவடிகளை அமைப்பது, வாக்காளா்களுக்கு அரசியல் கட்சிகள் பணம் பட்டுவாடா செய்வதைத் தடுப்பது உள்ளிட்டவை குறித்து கூட்டத்தின்போது ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *