சந்திரயான் 2-ன் லேண்டர் விக்ரம் லேட் ஆனது ஏன்?

பெங்களூரு, செப்டம்பர்-7

சந்திரயான்-2 திட்டத்தின் லேண்டர் விக்ரம் நிலவில் தரையிரங்குவதற்கும் 2.1 கி.மீ. உயரத்தில் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து முழுமையாக ஆய்வு செய்யப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை மாதம் 22-ம் தேதி இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சந்திரயான் 2 ஐ விண்ணில் செலுத்தியது. ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் ஆகிய மூன்று விண்கலன்கள் கொண்ட சந்திரயான் -2 பெங்களூருவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. படிப்படியாக புவியின் வட்டப்பாதையை விட்டு பிரிந்த சென்ற சந்திரயான் நிலவை நோக்கி பயணித்து வந்தது.

இதனையடுத்து, செப்டம்பர்-2 ம் தேதி சந்திரயானிலிருந்து ஆர்பிட்டர் விண்கலம் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டு நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், செப்டம்பர் 7-ம் தேதி அதிகாலை 1.30 மணியளவில் சந்திரயானின் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிரங்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்திருதனர். இதற்கான அனைத்து பணிகளும் நிறைவடைந்துவிட்டதாகவும், சந்திரயானில் இனி தவறுகள் நடக்க வாய்ப்பில்லை என்றும் இஸ்ரோ தலைவர் சிவன் கூறியிருந்தார்.

மேலும், விக்ரம் லேண்டர் தரையிரங்கும் அந்த 15 நிமிடங்கள் திக் திக் நிமிடங்களாகவே இருக்கும் எனவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் செப்டம்பர்-7ம் தேதி அதிகாலையில், இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளும் எதிர்பார்த்து காத்திருந்தபடி சந்திரயான் நிலவில் தரையிரங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. சந்திரயான் நிலவை நோக்கி பயணிக்கும் வேகத்தை படிப்படியாக இஸ்ரோ விஞ்ஞானிகள் குறைத்து தரையிரங்க வைப்பதற்கான பணியில் முழு வீச்சில் ஈடுபட்டு வந்தனர்.

யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென்று விக்ரம் லேண்டரின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. திட்டமிட்ட நேரத்தை விட அதிக நிமிடங்கள் ஆகியும் லேண்டர் விக்கிரமிடம் இருந்து எந்த தகவலும் வராததால், இஸ்ரோ மையமே நிலைகுலைந்து போனது. மேலும், என்ன நடந்திருக்கலாம் என்று அங்குள்ள விஞ்ஞானிகள் கூடி ஆலோசனையும் நடத்தினர்.

இதனையடுத்து, சிறுது நேரத்தில் இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து அதன் தலைவர் சிவன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது, விக்ரம் லேண்டர் 2.1 கிலோ மீட்டர் உயரத்தில் நிலவை நோக்கி சென்று கொண்டிருக்கும்போதே தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை கிடைத்த தரவுகள் முழுமையாக ஆய்வு செய்யப்படும் என்று தெரிவித்தார். முன்னதாக, லேண்டரிடம் இருந்து தகவல் வரவில்லை என்பதையும் பிரதமர் மோடியிடம் சிவன் எடுத்துரைத்தார். இதனையடுத்து இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்த வின்ஞானிகளுக்கு ஆறுதல் கூறிவிட்டு பிரதமர் மோடி புறப்பட்டுச் சென்றார்.

இந்த நிலையில், நிலவின் தென்துருவ பகுதியானது கரடுமுரடாக இருக்கும் என்பதாலும், நிலவில் ஈர்ப்பு விசை இல்லாத காரணத்தினாலும், லேண்டர் விக்ரம் கீழே விழுந்து நொறுங்கியிருக்கலாம் என்று அறிவியலாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். எதிர்பார்த்த வேகத்தை விட லேண்டர் விக்ரம் தரையிரங்கும் போது அதிக வேகத்தில் சென்றதாகவும் கூறப்படுகிறது. உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை இஸ்ரோ வெளியிட்டால் மட்டுமே லேண்டர் விக்ரமுக்கு என்ன ஆனது என்ற உண்மைகள் தெரியவரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *