கள்ள உறவில் பிறந்த குழந்தை எடப்பாடி பழனிசாமி.. ஆ.ராசா அநாகரிக பேச்சு

நல்ல உறவில் ஆரோக்கியமான உறவில் சுகப்பிரசவத்தில் பிறந்த குழந்தை நம்முடைய தலைவர் ஸ்டாலின் என்றால், கள்ள உறவில் பிறந்த குறைப்பிரசவம்தான் எடப்பாடி பழனிச்சாமி’’ என்று அநாகரிகமாக ஆ.ராசா பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, மார்ச்-26

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட தி.மு.க முன்னாள் மத்திய அமைச்சர் ராசா பேசியதாவது;-

’’ஓராண்டு காலம் அவர் கொடுத்த விளம்பரத்தால் அதில் கிடைத்த லாபத்தால் இன்றைக்கு இருக்கின்ற இவாள் பத்திரிகைகள் எல்லாம், அவரை மிகப்பெரிய தலைவர் போல் சித்தரிக்கிறார்கள். ஆனால், எடப்பாடி பழனிச்சாமிக்கு என்ன தகுதி? என்ன தியாகம்? பொதுவாழ்க்கையில் அவர் எட்டியிருக்கும் தொலைவு என்ன? ஒன்றும் கிடையாது. நல்ல உறவில் ஆரோக்கியமான உறவில் சுகப்பிரசவத்தில் பிறந்த குழந்தை நம்முடைய தலைவர் ஸ்டாலின் என்றால், கள்ள உறவில் பிறந்த குறைப்பிரசவம்தான் எடப்பாடி பழனிச்சாமி’’

ராசாவின் இந்த பேச்சுக்கு பெண்கள் அமைப்பினர் கடும் கண்டம் தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் என்றும் பார்க்காமல் தரம் தாழ்ந்த வகையில் ராசா பேசியது அரசியல் வட்டத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க பெண்களுக்கு எதிரான கட்சி என்பதை ராசா மீண்டும் நிரூபித்துள்ளதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர். ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற விரக்த்தியில் தி.மு.கவினர் முதலமைச்சர் மீது கீழ்த்தரமான விமர்சனங்களை வைப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *