கூட்டணிக்கட்சி வேட்பாளர்களும் வென்றால்தான் நான் முதல்வர் ஆக முடியும்.. ஸ்டாலின் பேச்சு
திருச்சி, மார்ச்-26

திருச்சி மாவட்டத்திலுள்ள 9 தொகுதிகளுக்குமான திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஸ்ரீரங்கத்தில் பிரச்சாரம் செய்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘எனக்காகவும் சேர்த்துதான் இங்கு ஓட்டுக் கேட்டு வந்துள்ளேன். நான் கொளத்தூர் தொகுதியில் எம்எல்ஏ வேட்பாளராக போட்டியிட்டாலும், ஒட்டுமொத்த தமிழகத்துக்குமான முதல்வர் வேட்பாளர் நான். கட்சியினர் இதை மறந்துவிட வேண்டாம். இங்குள்ள வேட்பாளர்களெல்லாம் வெற்றி பெற்றால்தான், நான் முதலமைச்சர். அதனால் இவர்களையெல்லாம் நிச்சயம் வெற்றி பெறச் செய்ய வேண்டும்’ என்றார்.