வருமான வரிச்சோதனையால் திமுகவின் வெற்றி பாதிக்காது… எ.வ.வேலு பேட்டி

வருமானவரி சோதனையில் பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை திமுகவின் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை, மார்ச்-26

திருவண்ணாமலையில் உள்ள திமுக முன்னாள் அமைச்சா் எ.வ.வேலுவுக்கு சொந்தமான வீடுகள், அலுவலகம், இரு பொறியியல் கல்லூரிகள், இரு அறிவியல் மற்றும் கலைக் கல்லூரிகள், ஒரு பட்டயக் கல்லூரி, பள்ளி என மொத்தம் 20 இடங்களில் ஒரே நேரத்தில் வியாழக்கிழமை சோதனை செய்தனா்.
நேற்று முற்பகல் 11 மணிக்கு தொடங்கிய இந்த வருமானவரி சோதனை இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. சென்னை ஆழ்வார்வேட்டையில் உள்ள எ.வ.வேலு வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.

இதுகுறித்து திமுகவின் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வருமான வரிச்சோதனையால் திமுகவின் வெற்றி பாதிக்காது. தோல்வி பயம், அரசியல் உள்நோக்கத்துடன் வருமானவரி சோதனை நடத்துகிறார்கள். வருமானவரி சோதனையில் எந்த ஆவணங்களும், தொகையும் கைப்பற்றப்படவில்லை என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *