மச்சான்ஸ் தாமரைக்கு ஓட்டு போடுங்க.. வானதி சீனிவாசனை ஆதரித்து நடிகை நமீதா பிரச்சாரம்

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து பரப்புரை செய்த நடிகை நமிதா, மச்சான்ஸ் தாமரைக்கு வாக்கு போடுங்கள் என்று கூறி வாக்கு சேகரித்தார்.

கோவை, மார்ச்-26

கோவை காந்திபுரம் ராம்நகர் தொகுதியில் உள்ள ராமர் கோவில் முன்பு வாக்கு சேகரித்த அவருக்கு இளைஞர்கள் நடமாடியும், பாஜக அதிமுக தொண்டர்கள் குத்தாட்டம் போட்டும் வரவேற்பு அளித்தனர். அவர்களுடன் நமிதாவும் வானதி சீனிவாசனும் நடனமாடினர்.

அப்போது கமல்ஹாசனை மறைமுகமாக சாடி அவர் வாக்கு சேகரித்தார். பொதுமக்கள் மத்தியில் அவர் பேசுகையில் தமிழகம் கலாசாரம், கடவுள் நம்பிக்கை உள்ள பூமி. அந்த கடவுள் நம்பிக்கை இல்லாத ஒருவரை நம்பி நீங்கள் எப்படி ஓட்டுப் போட முடியும். எனவே மக்களாகிய நீங்கள் சிந்தித்து உள்ளூர் சகோதரிக்கு தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள்.
மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் உங்கள் வீடு தேடி வரும். கோவையில் தாமரை மலரும். தமிழகத்தில் தாமரை வளரும். மச்சான்ஸ் தாமரைக்கு ஓட்டு போடுங்க. தாமரை மலரும். தமிழ்நாடு வளரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *