குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு நெஞ்சுவலி.. மருத்துவமனையில் அனுமதி

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நெஞ்சுவலி காரணமாக டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டெல்லி, மார்ச்-26

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று காலை லேசான நெஞ்சு வலி ஏற்பட்டதால் பரிசோதனைக்காக டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு குடியரசுத் தலைவர் சென்றார். அங்கு சென்றதும் அவருக்கு உரிய பரிசோதனைகள் செய்யப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது வழக்கமான பரிசோதனைகள்தான் என்றும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது. அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை கூறி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *