மேற்கு வங்கம், அசாமில் முதல் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது.. நாளை வாக்குப் பதிவு

மேற்கு வங்கத்தில் 30, அசாமில் 47 தொகுதிகளுக்கு நாளை முதற்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் நேற்று மாலை ஓய்ந்தது.

கொல்கத்தா, மார்ச்-26

மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல், 8 கட்டங்களாக நடைபெற உள்ளது. இவற்றில் முதற்கட்டமாக 30 தொகுதிகளுக்கான தேர்தல் நாளை நடைபெறுகிறது. பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் புருலியா, பங்குரா, ஜார்க்ராம், புர்பா மெதினிபூர் உள்பட 30 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பிரசாரத்தில் பாஜ சார்பில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜ தலைவர் நட்டா உள்ளிட்ட பலர் தீவிர பிரசாரம் செய்தனர். மேற்கு வங்க முதல்வரான மம்தா பானர்ஜி காலில் காயம்பட்டு உள்ளதால் சக்கர நாற்காலியிலேயே சூறாவளி பிரசாரம் செய்தார். இந்நிலையில், இம்மாநிலத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவுக்கான பிரசாரம் நேற்று மாலை ஓய்ந்தது. இதேபோல், மொத்தம் 126 தொகுதிகளை கொண்ட அசாமில் 47 தொகுதிகளுக்கு நாளை முதல்கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்கான பிரசாரமும் நேற்று மாலை ஓய்ந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *