அமமுகதான் தேமுதிகவுடன் கூட்டணி வைத்துள்ளது..விஜயகாந்த் மகன் பேச்சால் சலசலப்பு

அமமுகவுடன் நாங்கள் கூட்டணி வைக்கவில்லை எங்களுடன்தான் அவர்கள் கூட்டணி வைத்துள்ளார்கள் என விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி, மார்ச்-26

அமமுகவுடன் தேமுதிக கூட்டணி வைத்து. அமமுக தரப்பில் தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தற்போது அமமுக கூட்டணியில் இடம்பெற்று இருக்கும் விஜயபிரபாகரன் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியில் பேசிய விஜயபிரபாகரன்;- தேமுதிக தமிழகத்தில் மிகவும் வலிமையாக இருக்கிறது. இந்த சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக தனது வலிமையை நிரூபிக்கும். நாங்கள் யாரிடமும் கூட்டணி வேண்டும் என்று போய் நிற்கவில்லை. அமமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெறவில்லை. மாறாக தேமுதிக கூட்டணியில்தான் அமமுக இடம்பெற்றுள்ளது என்றார்.

இவரது பேச்சு அமமுகவினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் இடம் கிடைக்கவில்லை என்று அவர்கள்தான் அமமுகவினருக்கு வந்தனர் என அவர்கள் கூறி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *