சாக்குமூட்டையில் ரூ.1 கோடி பணம் பறிமுதல் எதிரொலி.. திருச்சி மாவட்ட ஆட்சியர், உதவி ஆட்சியர், எஸ்.பி. கூண்டோடு மாற்றம்

திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, ஸ்ரீரங்கம் சார் ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா மற்றும் காவல் கண்காணிபாளர் ராஜன் ஆகியோரை பணியிடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருச்சியில் முசிறி அருகே ஒரு கோடி ரூபாய் சாக்குமூட்டையில் கைப்பற்றப்பட்ட நிலையில் தேர்தல் ஆணையம் அதிகாரிகளை இடமாற்றம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

திருச்சி, மார்ச்-26

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில்,

திருச்சி மாவட்ட ஆட்சியராக உள்ள எ.சிவராசுவை மாற்றித் தேர்தல் அல்லாத பணியில் அமர்த்த வேண்டும்.திருச்சி மாவட்டக் கண்காணிப்பாளர் பி.ராஜன் தேர்தல் அல்லாத பணிக்கு மாற்றப்பட வேண்டும்.திருச்சி தலைமையிடத் துணை ஆணையராகப் பணியாற்றும் மயில்வாகனனை திருச்சி மாவட்ட எஸ்.பி.யாக நியமிக்க வேண்டும்.

திருச்சியின் புதிய ஆட்சியராக திவ்யதர்ஷினியை நியமிக்க வேண்டும்.திருச்சி மாவட்ட உதவி ஆட்சியராகப் பதவி வகிக்கும் நிஷாந்த் கிருஷ்ணா மாற்றப்பட்டு தேர்தல் அல்லாத பணியில் அமர்த்தப்பட வேண்டும்.திருச்சி உதவி ஆட்சியராக விஷு மஹாஜனை நியமிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கோவை ஆட்சியர் மற்றும் எஸ்.பி ஆகியோரை இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *