திமுக தேர்தல் அறிக்கை கள்ளநோட்டு, அதிமுக தேர்தல் அறிக்கை நல்ல நோட்டு.. ஓ.பன்னீர் செல்வம் பேச்சு

திமுக தேர்தல் அறிக்கை கள்ளநோட்டு என்றும், அதிமுக தேர்தல் அறிக்கை நல்ல நோட்டு எனவும் கோவையில் நடைபெற்ற பிரச்சாரத்தின் போது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.

கோவை, மார்ச்-25

கோவை கற்பகம் கல்லூரி அருகே அதிமுக, பாஜக கூட்டணிக்கு ஆதரவு திரட்டும் பிரச்சாரத்தில் ஈடுப்பட்ட அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களை வரவேற்று பிரச்சார உரையை துவக்கினார். அப்போது பேசிய அவர், சுதந்திரத்திற்கு பின் காங்கிரஸ் மற்றும் திமுக இரண்டும் தமிழகத்தை ஆண்டு இருக்கிறது. ஆனால் 10 ஆண்டு காலங்களாக யாராலும் வெல்ல முடியாத முதலமைச்சராக எம்.ஜி.ஆர் ஆண்டு இருக்கிறார்.

அதனை தொடர்ந்து புரட்சி தலைவி 20 ஆண்டுக்கும் மேலாக கழக பொது செயலாளராக இருந்து கலக்கத்தை வழி நடத்தி இருக்கிறார் என்று தெரிவித்தார். புரட்சி தலைவி நம் தமிழகத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை அளித்துள்ளார் என்று தெரிவித்த அவர்,தொலைநோக்கு திட்டங்களை அளித்துள்ளார் என்று கூறினார். அதுமட்டுமின்றி பெண்களுக்கான திட்டங்கள், சமூக பாதுகாப்பு திட்டங்கள் போன்ற பலவற்றை வழங்கியுள்ளார் என்றும் தெரிவித்தார். தற்போதும் அதிமுகவால் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது என்றும், திமுக ஆட்சியை காட்டிலும் அம்மாவின் அரசு பல நன்மைகளை செய்துள்ளததாகவும், காவிரி நதி விஷயத்தில் 7 ஆண்டுகளாக திமுக காங்கிரஸ் செய்யாததை அம்மா 3 ஆண்டுகளில் அரசாணை பெற்று தந்ததாகவும்,
திமுக காலத்தில் மின் தட்டுபாடு இருந்தாகவும் கூறினார்.

மேலும் உண்மையிலேயே ஜல்லிக்கட்டு நாயகன் பிரதமர் தான் என்று கூறிய அவர், திமுக அறிக்கை கள்ள நோட்டு என்றும் அதிமுக அறிக்கை நல்ல நோட்டு என்றும் தெரிவித்தார். வாசிங் மெசின், சிலிண்டர்கள் வழங்குவது உறுதி எனவும், விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை வரும் என்றும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *