கோவை மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் பணியிட மாற்றம்.. தேர்தல் ஆணையம் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி மற்றும் காவல் ஆணையர் சுமித்சரண் ஆகியோரை பணியிடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கோவை, மார்ச்-25

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிகாரிகள் தொடர்ந்து இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணியும், மாநகர காவல் ஆணையர் சுமித் சரனும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கோவைக்கு புதிய மாவட்ட ஆட்சியராக நாகராஜன் என்பவரையும், காவல் ஆணையராக டேவிட்சன் தேவாசீர்வாதம் என்பவரையும் நியமனம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ராசாமணி மற்றும் சுமித் சரண் ஆகிய இருவரையும் தேர்தல் அல்லாத பணிகளில் பணியமர்த்துமாறும் மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையர் மீது தேர்தல் ஆணையத்திற்கு பல்வேறு புகார்கள் வந்ததையடுத்து, தேர்தல் அல்லாத பணிகளுக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *