வன்னியர் சங்கத் தலைவராக அருள்மொழி நியமனம்-ராமதாஸ் அறிவிப்பு

சென்னை, நவம்பர்-02

மாநில வன்னியர் சங்கத்தின் புதிய தலைவராக அருள்மொழியை நியமனம் செய்து மருத்துவர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.     காடுவெட்டி குரு என்றழைக்கப்படும் செ.குருநாதன் பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னணி தலைவராகவும், மாநில வன்னியர் சங்க தலைவராகவும் இருந்தார். இவர், கடந்த வருடம் மே மாதம் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காடுவெட்டி குருவின் மறைவுக்குப் பிறகு புதிய தலைவர் நியமிக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில், ஒரு வருடங்களுக்குப் பிறகு, தற்போது மாநில வன்னியர் சங்க தலைவராக அருள்மொழி என்பவரை நியமனம் செய்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். பு.தா. அருள்மொழி பா.ம.க.வின் தொடக்க காலத்தில் இருந்து ராமதாஸுடன் பணியாற்றியவர் என்பதும், ஏற்கனவே வன்னியர் சங்க தலைவராக பதவி வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *