தேர்தல் பிரச்சாரத்தில் திடீர் மாரடைப்பு.. அதிமுக எம்.பி. முகமது ஜான் காலமானார்.!

அ.தி.மு.க. எம்.பி முகமது ஜான் பிரசாரத்தில் ஈடுபட வந்த போது மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

சென்னை, மார்ச்-23

2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ராணிப்பேட்டை தொகுதியிலிருந்து அதிமுக சார்பில் எம்எல்ஏவாக முகமது ஜான் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் சில மாதங்கள் தமிழக பிற்படுத்தப்பட்டோர் சிறபான்மை நலத்துறை அமைச்சராக அமைச்சராக பதவி வகித்தார். தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராகவும் முகமது ஜான் பணியாற்றி வந்துள்ளார். இதற்கிடையே, கடந்த 2019-ம் ஆண்டு அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாலாஜா அருகே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட முகமது ஜானுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது. முகமது ஜான் மறைவிற்கு பல்வேறு அரசியல்கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *