வேட்பாளர்களின் அட்ராசிட்டீஸ்.. தோசை சுட்டு, துணி துவைத்து விதவிதமாக வாக்கு சேகரிப்பு..!!

வாக்காளர்களிடம் ஓட்டு சேகரிக்கச் செல்லும் வேட்பாளர்கள், புதுப்புது யுக்திகளைக் கையாண்டு மக்களைக் கவர முயன்று வருகின்றனர்.

மார்ச்-23

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பரப்புரை மேற்கொள்ளும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தினமும் வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்து வருகிறார். பொட்டிபுரம், சித்திரட்டி புரம் உள்ளிட்ட பகுதிகளில் பரப்புரை மேற்கொண்ட அமைச்சர் மூதாட்டிகளின் காலில் விழுந்து அவர்களுக்கு பொன்னாடை போற்றி வாக்கு சேகரித்தார். மேலும் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்துக்கு தண்ணீர் தெளித்து கொடுத்தும், அங்கு உள்ள தொழிலாளர்களிடம் அதிமுகவுக்கு வாக்கு அளிக்கும் படி கேட்டுக்கொண்டார்.

மேல் கூடலூர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் பொன்.ஜெயசீலன் தொண்டர்களோடு நடனமாடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கடந்த 15 ஆண்டுகளுக்கு பிறகு நீலகிரி மாவட்டம் கூடலூர் தொகுதியை கைபற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு அதிமுக களம் இறங்கி உள்ளது. உள்ளுர் வேட்பாளரான பொன்.ஜெயசீலனை களமிறக்கி அதற்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. அவரும் பல பகுதிகளுக்குச் சென்று மக்களை பல்வேறு விதங்களில் கவர்ந்து வாக்கு சேகரித்து வருகிறார்.

மயிலாடுதுறை சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கி.காசிராமன் கிராமம்தோறும் மக்களைச் சந்தித்து வாக்குச் சேகரிக்கும்போது அங்குள்ள கருவேல மரங்களை அரிவாளைக்கொண்டு வெட்டி “இயற்கையைப் பாதுகாப்போம்” என்ற முழக்கத்தோடு வாக்குச் சேகரிக்கிறார்.

இந்நிலையில் இன்று அவர், மேல் கூடலூர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு பேண்ட் வாத்தியம் இசைத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. தொண்டர்கள் மற்றும் பெண்கள் உற்சாக நடமாடி அவரை வரவேற்றனர். ஒரு கட்டத்தில் வேட்பாளர் பொன்.ஜெயசீலனும் அவர்களோடு நடனமாடி வாக்கு சேகரித்தார்.

அதேபோல், நாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் தங்க.கதிரவன் இன்று நாகூர் வண்டிப்பேட்டை பகுதியில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பெண்மணி ஒருவர் துணி துவைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்த வேட்பாளர், அவரை நகரச் சொல்லிவிட்டு அந்த இடத்தில் அமர்ந்தார். பின்பு, அங்கிருந்த துணியைத் துவைத்தவாறே இரட்டை இலைச் சின்னத்தில் வாக்கு அளிக்குமாறு மக்களிடம் வாக்குச் சேகரித்தார். நாகூரில் அ.தி.மு.க வேட்பாளர் துணி துவைத்து வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

அதேபோல் விருகம்பாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் பிரபாகர் ராஜா சின்மயா நகர் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் தோசை சுட்டுக்கொடுத்து மக்களின் ஆதரவை திரட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *