தமிழகத்தில் பாஜக தனித்து போட்டியிட்டால் ஒரு ஊராட்சிமன்ற தலைவர் பதவி கூட கிடைக்காது.. திருமா விமர்சனம்

தமிழகத்தில் பாஜக தனித்து போட்டியிட்டால் ஒரு ஊராட்சிமன்ற தலைவர் பதவி கூட கிடைக்காது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு, மார்ச்-23

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் பாலாஜியை ஆதரித்து பானை சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.அப்போது தமிழகத்தில் எப்படியாவது காலூன்றிவிடலாம் என்ற எண்ணத்தில் உள்ளது பாஜக என்றார் அவர். தனித்து போட்டியிட்டால் ஒரு ஊராட்சிமன்ற தலைவர் பதவி கூட கிடைக்காது என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இன்னும் கொஞ்ச காலத்தில் அதிமுக மற்றும் பாமக என்ற கட்சிகளே இருக்காது என்றும் அந்த கட்சிகளை பாஜக அழித்து விடும் என்றும் அவர் கூறியுள்ளார். கூட இருந்தே குழிபறிக்கும் கூட்டம் பாஜக எனவும் திருமாவளவன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *