மீனவர்களுக்கும் ஆண்டுதோறும் உதவி தொகை ரூ.6000, பூரண மதுவிலக்கு, இந்து கோவில்களுக்கு தனி வாரியம்… பாஜக தேர்தல் அறிக்கை

சென்னை, மார்ச்-22

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான, பாஜக தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தேர்தல் அறிக்கையை மத்திய மந்திரிகள் நிதின் கட்கரி, விகே சிங் ஆகியோர் வெளியிட்டனர். மாநில பாஜக தலைவர் எல்.முருகன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

 • 50 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்
 • 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்கள் மீட்கப்பட்டு, பட்டியலின மக்களிடம் வழங்கப்படும்.
 • மீண்டும் சட்ட மேலவை கொண்டு வரப்படும்
 • விவசாயிகளுக்கு வழங்கப்படுவதுபோன்று, மீனவர்களுக்கும் ஆண்டுக்கு 6000 ரூபாய் வழங்கப்படும்
 • 5 ஆண்டுகளுக்கு முற்றிலுமாக ஆற்றுப்படுகைகளில் மணல் அள்ளுவது தடை செய்யப்படும்
 • இந்து கோவில்களின் நிர்வாகம் தனித்து இயங்கும் வாரியத்திடம் ஒப்படைக்கப்படும்.
 • தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும்
 • அதிக நிதி ஒதுக்கீடு செய்து விவசாயத்திற்கு என தனி பட்ஜெட் போடப்படும்
 • சென்னை மாநகராட்சி மூன்று மாநகராட்சிகளாக பிரிக்கப்படும்.
 • ​சென்னை உயர்நீதிமன்றத்தின் (கிளை ) கோயம்பத்தூரில் அமைக்கப்படும்
 • 60 வயது நிரம்பிய மூத்த குடிமக்களுக்கு ஆன்மீக சுற்றுலா செல்ல மானிய வழங்கப்படும்
 • பசுவினத்தை பாதுகாக்க பசுவதை பாதுகாப்பு சட்டம் முறையாக அமல்படுத்தப்படும்.
 • சட்ட மேலவை மீண்டும் கொண்டுவரப்படும்
 • 50 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்
 • நதிகள் இணைப்பு மூலம் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக மாநில நீர் வழி போக்குவரத்து உருவாக்கப்படும்
 • மக்காத பிளாஸ்டிக் விற்பனை முற்றிலும் தடை செய்யப்படும்
 • தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக அரசு பல்நோக்கு மருத்துவமனைகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் நிறுவப்பட்டு இலவச சிகிச்சை அளிக்கப்படும்
 • சென்னை, மதுரை, கோவை, திருச்சி போன்ற நகரங்களில் இயங்கும் அரசு தலைமை மருத்துவமனைகளில் வான்வெளி ஆம்புலன்ஸ் சேவை துவங்கப்படும்
 • எல்லா மாநில நெடுஞ்சாலைகளும் நான்கு வழி சாலைகளாக மாற்றப்படும்
 • விவசாயத்துக்கு தனி பட்ஜெட் உருவாக்கப்படும்.
 • டெல்லி போல சென்னையும் 3 மாநகராட்சிக்காக பிரிக்கப்படும்.
 • மீனவர்களுக்கும் வருடாந்திர உதவி தொகை ரூ.6000 வழங்கப்படும்.
 • இந்து கோவில்களின் நிர்வாகம், தனித்து இயங்கும் வாரியத்திடம் ஒப்படைக்கப்படும்.
 • பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும்.
 • டாஸ்மாக் ஊழியர்கள் வேறு அரசு துறைகளில் பணியமர்த்தப்படுவர்.
 • 18 முதல் 23 வயது வரை உள்ள இளம்பெண்களுக்கு இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் இலவசமாக வழங்கப்படும்.
 • 8, 9ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச டேப்லெட் வழங்கப்படும்.
 • தேசிய கல்விக்கொள்கை முழுமையாக அமல்படுத்தப்படும்.
 • மத்திய அரசின் 30% மானியத்துடன் வீடுகளில் சூரிய ஒளி மின்சார திட்டம் அமலாக்கப்படும்.
 • அந்நிய செலாவணியை அதிக அளவில் ஈட்டித்தரும் பின்னலாடை தொழிலை மேம்படுத்த ‘பின்னலாடை வாரியம்’ ஏற்படுத்தப்படும்.
 • ஒரு குவிண்டால் நெல்லுக்கு குறைந்த பட்ச ஆதார விலை ரூ.2500 ஆக நிர்ணயம்.
 • தாராபுரம் வட்டம் குளத்துப்பாளையத்தில் மூடப்பட்டுள்ள கூட்டுறவு நூற்பாலை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்படும்.
 • விலை பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய ’விலை நிர்ணயக் குழு’
 • தமிழக அரசின் பொதுப் பணித்துறையின் கீழ் ’விவசாய நீர் பாசன துறை’ உருவாக்கப்படும்.
 • வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தில் பிறக்கும் பெண் குழந்தை பெயரில் ரூ.1 லட்சம் வைப்பு நிதி
 • தொழில் செய்ய ஏதுவான சூழ்நிலையை உருவாக்கி தென் இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *