தமிழக சட்டசபை தேர்தல் – வேட்பாளர் இறுதி பட்டியல் இன்று வெளியாகிறது..

சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட 4 ஆயிரத்து 500-க்கும் அதிகமான வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. 2 ஆயிரத்து 700-க்கும் கூடுதலான மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. வேட்புமனுக்களை திரும்பப் பெற இன்று கடைசி நாளாகும். இதன்பின்பு, இன்று மாலையே இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியாகிறது.

சென்னை, மார்ச்-22

தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டமன்ற தொகுதிக்கும் ஏப்ரல் மாதம் 6-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் கடந்த 12-ந் தேதி தொடங்கி, 19-ஆம் தேதி நிறைவடைந்தது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை சனிக்கிழமை நடைபெற்றது. பல இடங்களில் வேட்புமனுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், ஞாயிற்றுக்கிழமையும் பரிசீலனை தொடா்ந்தது. மேலும், சில தொகுதிகளில் வேட்புமனுக்கள் திரும்பப் பெறப்பட்டன.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட 7 ஆயிரத்து 250-க்கும் கூடுதலான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவை சனிக்கிழமை பரிசீலனைக்கு எடுக்கப்பட்டன. அதில், 4 ஆயிரத்து 500-க்கும் அதிகமான வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. 2 ஆயிரத்து 720-க்கும் கூடுதலான மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

கரூா் பேரவைத் தொகுதியில் 97 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவைகளில் 13 நிராகரிக்கப்பட்டு, 84 மனுக்கள் ஏற்கப்பட்டன. காங்கயத்தில் 58 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு அதில் 8 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 50 மனுக்கள் ஏற்கப்பட்டன. அரவக்குறிச்சி தொகுதியில் 47 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு அவற்றில் ஏழு மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 40 மனுக்கள் ஏற்கப்பட்டன.

வேட்புமனுக்களைத் திரும்பப் பெற இன்று மாலை 3 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதன்பின்பு, இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்படும். இந்தப் பட்டியலைத் தொடா்ந்து, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைகளுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் எத்தனை போ், எந்தத் தொகுதியில் அதிகம் போ் போட்டி, ஆண்கள் எத்தனை போ், பெண்கள் எத்தனை போ் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இன்று மாலை வெளியிடப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *